Idhayam Matrimony

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மீண்டும் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல் நிலைய எல்லைகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல்நிலைய எல்லைப் பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) நீட்டிக்கப்பட்டுள்ளது.  

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 1980-களின் தொடக்கத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது. கடந்த 2023 மே மாதம் வடகிழக்கு மாநிலத்தில் குகி பழங்குடிகளுக்கும், மைத்தேயி பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாகி மாநிலம் முழுவது பரவியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மாநிலத்தில் மலைப் பிராந்தியம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதுகுறித்து இம்பால் போலீஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப் பட்டன ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து