Idhayam Matrimony

ஏக்நாத் ஷிண்டே குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் பெற்ற குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Eknath-Shinde 2023 04 30

Source: provided

மும்பை : முன்ஜாமீன் பெற்ற நிலையில் குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமெடியன் குணால் கம்ரா சமீபத்தில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குறித்து பாடிய கேலிப்பாடல் சர்ச்சையானது. இதையடுத்து சிவசேனாவினர் குணால் கம்ரா வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் குறித்து போலீசார் சிவசேனாவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல ஏக்நாத் ஷிண்டேயை 'துரோகி ' எனகூறி பாடல் பாடிய குணால் கம்ரா மீது சிவசேனாவினர் புகார் அளித்தனர்.

இந்த புகார் குறித்து குணால் கம்ரா மீது கார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் குணால் கம்ரா சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்று உள்ளார். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே குறித்து இழிவாக பாடல் பாடியதாக குணால் கம்ரா மீது சிவசேனாவினர் அளித்த புகாரின் பேரில் நாசிக், ஜல்காவ், புல்தானா பகுதிகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது மக்களுக்கு ஆபத்தும் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகள் கார் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து