எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தி.மலை : திருவண்ணாமலையில் நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஆரணி அருகே மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி வசந்தம்மாள், இவர்களுக்கு குமரேசன், லோகேஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இவர்களுக்கு நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் சேகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. சேகர் அந்த நிலத்தில் இருக்கக்கூடிய மரம் செடிக்கொடிகளை அகற்ற வேலை ஆட்களுடன் சென்றபோது. சேகருக்கும் மாதவனுக்கும் மீண்டும் பிரச்சினை எழுந்தது.
இந்த நிலையில் சேகரின் வீட்டுக்குள் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து சேகர், வசந்தம்மாள், குமரேசன், லோகேஸ் ஆகியோரை தாக்கினர். இந்த தாக்குதலில் 4 பேருக்கும் சரமாறியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சேகருக்கும் குமரேசனுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து தற்போது ஆரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினறையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


