Idhayam Matrimony

மதுபானங்கள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Delhi-cm 2025-02-20

Source: provided

புதுடெல்லி : மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். 

இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு முதல்வர் ரேகா குப்தா அளித்த பதில்:- ஆம் ஆத்மி ஆட்சியின்போது புதிய மதுபானக் கொள்கை திட்டத்தை அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் டெல்லி அரசுக்கு ரூ.5,068.92 கோடி, மதுவகைகள் மீதான வரிகளால் வருவாய் கிடைத்துள்ளது. 

மேலும் பால், பால்பொருட்கள் கொள்முதல், விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.209.9 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி வரையிலான வருவாயாகும் இது. 2021-22-ல் ரூ.5,487 கோடியும், 2022-23-ல் ரூ.5,487 கோடியும், 2023-24-ல் ரூ.5164 கோடியும் மதுபானங்களால் டெல்லி அரசுக்கு வருவாயாக கிடைத்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து