எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும். அதன் தொடர்ச்சியான வரும் இந்த எல் 2 எம்புரான் படத்தில் தற்போதய முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்கிறார். இதனால், கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதால் மீண்டும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் சொல்வது தான் ‘எல்2 : எம்புரான்’. முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், சர்வதேச அரசியலையும் கையில் எடுத்திருக்கிறார். குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் வலம் வருகிறார். பிரித்விராஜ் சுகுமார்,
மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்கள் பிரம்மாண்டம். தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருந்தாலும், பலவீனமான திரைக்கதையால் பார்வையாளர்களிடம் இப்படம் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. மொத்தத்தில், ‘எல்2: எம்புரான்’ நகை வைக்கபடாத ஒரு அழகிய தங்க நகைப்பெட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


