எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. மறுபக்கம், நாயகி அஞ்சனா கிர்த்தி நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா?, என்பது தான் படத்தின் கதைக்களம். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் பாலு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை விடுத்து சமூகமே பிரச்சனையில் தான் இருக்கிறது என்று படம் முழுக்க பேசியிருக்கிறார். போராட்ட காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பாலு அவ்வபோது டூயட் பாடல் பாடி, தான் நாயகன் என்பதை நினைவூட்டுகிறார். ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன், பெண் அமைசர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாதாவாக களமிறங்கியிருக்கும் சன் டிவி சக்தி தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவையே பேச வைத்திருக்கும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது. இயக்குனர் பாலு சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள் சமூகத்திற்கு அவசியமானது என்றாலும், அதை அழகாக சொல்லி இருந்தால் அறம் வென்றிருக்கும். மொத்தத்தில், அறம் செய் காகிதத்தில் எழுதப்பட்ட சுரைக்காய்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


