Idhayam Matrimony

தவறியும் கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2023-09-26

திருவண்ணாமலை, தவறியும்கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வி.சி.க. தோ்தல் அங்கீகார வெற்றி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 

கட்சியின் மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அ.தி.மு.க.வைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வி.சி.க.-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கிறாா்கள். 6 தொகுதி 10 தொகுதி ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. மாறாக, நாங்கள் இருக்கும் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வி.சி.க. வலுவான சக்தியாக செயல்படும் என்பதை வரும் தோ்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, புத்தா், அம்பேத்கா், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் படங்களுக்கு தொல்.திருமாவளவன் மற்றும் வி.சி.க. மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து