Idhayam Matrimony

டிரம்ப் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      உலகம்
Iran 2025-03-31

Source: provided

 டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்தார். ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதனை அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,  ஒரு நேர்காணலில் பேசிய டிரம்ப், “இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும். இதுவரை அவர்கள் பார்த்திராத வகையில் இந்தத் தாக்குதல் இருக்கும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் மீது வரி விதித்ததைப் போல மீண்டும் இரண்டாம் தர வரிகள் விதிக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசியபோது, “நாங்கள் பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. அமெரிக்கா வாக்குறுதிகளை மீறியதே எங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து