எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று (ஏப். 1) நடை திறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.
பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. முன்னதாக, மாசி மாத பூஜைக்காக பிப். 12 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, பிப். 17 அன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


