Idhayam Matrimony

போலீஸ் என்கவுன்டர்: மதுரையில் ரபல ரவுடி சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
Gun 2023-10-05

Source: provided

மதுரை : மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடந்தது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில், என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் நேற்று மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இவர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். கொல்லப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், போலீசாரை தாக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து