Idhayam Matrimony

பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பத்திரப்பதிவில் ஒரு சதவீதம் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமல்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது இன்று முதல் (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிப்பு...

சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-ல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அந்த ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்தாா். அதைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

10 லட்சம் ரூபாய் வரை...

அதில் மகளிா் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் ரூ.10 லட்சம் மதிப்பு வரை பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இது இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவீத கட்டணக் குறைப்பால் தற்போதைய பத்திரப் பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் வரை பயன்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சா் தங்கம் தென்னரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து