Idhayam Matrimony

3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      உலகம்
Earthquack 2024-12-06

ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கிய 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பரிதாமாக உயிரிழந்தனர். இந்தச் சோகத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்களை ஜப்பான் நாடு தெரிவித்திருக்கிறது. ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இந்த பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகவும் வாய்ப்புள்ளது என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அளவுக்கு இந்தப் பொருளாதார சேதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சேதங்களைவிட 214.2 டிரில்லியன் யென் அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஜப்பானில் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8 முதல் 9 வரையிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேற்கண்ட நிலநடுக்க எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருவேளை நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளிலிருந்து சுமார் 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், அவர்களில் 2.98 லட்சம் மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியாக வாய்ப்புமுள்ளது. முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டில் ரிக்டர் அளவுகோலில் 9-ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அணுஉலை வெடிவிபத்தில் 15,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து