எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார். அங்கு வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக்கடலைச் சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விஷயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் அவர் வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


