Idhayam Matrimony

ஆஸி., கிரிக்கெட் அணி ஒப்பந்த வீரர்களின் பெயர்கள் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      விளையாட்டு
Australia-1 2024-06-21

Source: provided

சிட்னி : 2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஒப்பந்த வீரர்கள்...

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் இந்தமுறை பெற்றுள்ளனர். முக்கியமான வீரர்கள் இருந்தாலும் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார்களான கூப்பர் கன்னோலி, ஷான் அப்பாட், ஆரோன் ஆர்டி, டாட் மர்பிக்கு இந்த முறை அணியில் இடமில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

மீண்டும் குன்னஹ்மேன்...

வார்னே-முரளிதரன் கோப்பையில் அசத்திய குன்னஹ்மேன் நடுவரால பந்துவீச ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து சட்டப்படி பிரிஸ்பேனில் தன்னை நிரூபித்து மீண்டும் பந்துவீச தயாராகியுள்ளார். கடந்த 12 மாதங்களாக சுமாராக விளையாடிய பேட்டர் மாட் ஷார்ட், ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் ஏன்?

இது குறித்து ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது: குன்னஹ்மான் இலங்கையில் சிறப்பாக விளையாடினார். அடுத்த 18 மாதங்களுக்கு இவர் முக்கியமான பங்கினை வகிப்பாரென நாங்கள் நம்புகிறோம். பியூ வெப்ஸ்டர் நல்ல டெஸ்ட் ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார். அது அணிக்கு நல்ல சமநிலையை வழங்கியுள்ளது. கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கு வந்திருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், மே.இ.தீ. உடனான தொடரில் நல்ல ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். சாம் கான்ஸ்டாஸ் நம்பிக்கையளிக்கும் இளம் வீரர். மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்வாரென நம்புகிறோம் என்றார்.

ஒப்பந்த வீரர்கள் விவரம்...

சேவியர் பர்ட்லெட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மான், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், லான்ஸ் மாரிஸ், ஜோய் ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், ஆடம் ஸாம்பா. பி.ஜி.டி. தொடரில் அசத்திய சாம் கான்ஸ்டாஸ், ஸ்காட் போலாண்ட், பியூ வெப்ஸ்டர் மற்றும் இலங்கை தொடரில் அசத்திய குன்னஹ்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து