Idhayam Matrimony

இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      உலகம்
Xi-Jinping 2

Source: provided

சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முக்கு எழுதிய கடிதத்தில் "டிராகன்-யானை' ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஷி ஜின்பிங்குக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரெüபதி முர்மு, இந்தியா-சீனா இடையேயான உறவுகள் இருநாடுகள் மட்டுமின்றி உலகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என குறிப்பிட்டார். அதேபோல் சீன பிரதமர் லீ கியாங்குக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இருநாடுகள் இடையேயான உறவுகள் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

இந்தியா, சீனா ஆகிய இரு பழம்பெரும் நாகரிகங்களும் மனித வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது' என கூறியதாக சீன அரசின் செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இருநாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து