Idhayam Matrimony

கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பெள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன், பாலக்கரை பகுதியில் உள்ள புதிய காலனியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக ஒரு சில பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை குடிநீர் வருவதாக கூறி உள்ளார்கள். எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மூலம் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதில் அளித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து