எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று முதல் வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு மதுரையில் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டை சிபிஎம் மூத்த தலைவர் பிமன் பாசு கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத், கேரள முதல்வரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வருகை தந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


