எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5-இல் நடத்தப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நமது நியாயமான கோரிக்கைகளையும், அவை சாா்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு, இதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையாக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளம், தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வா்கள், கா்நாடக மாநில துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவா்கள் நேரில் பங்கேற்றனா். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சாா்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடைியல் தமிழக சட்டசபையில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை மீட்டெடுக்கத் தீா்மானிக்கப்பட்டது. அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான மறுசீரமைப்பைப் பெற, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துகளை மனுவாக அளிக்க வேண்டும்.
மேலும், சென்னையில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை, தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் சேர்ந்து, தங்களை நேரில் சந்தித்து அளித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான எங்கள் கவலைகளை தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.
முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்க நாங்கள் உடனடியாக தங்களை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோருகிறோம். தங்களது விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் விரைவாக நல்ல பதிலளிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


