எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : ஐ.பி.எல். போட்டியின் 13-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
பஞ்சாப் பந்துவீச்சு....
முதலில் லக்னோ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 16.2 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 177 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீசத் தயாரானது. லக்னோ இன்னிங்ஸில், மிட்செல் மாா்ஷ் முதல் ஓவரிலேயே ரன்னின்றி வெளியேறினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த எய்டன் மாா்க்ரம் - நிகோலஸ் பூரன் கூட்டணி 31 ரன்கள் சோ்த்தது.
19 ரன்களுக்கு...
மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 28 ரன்களுக்கு ஸ்டம்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த், அடுத்த ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இதனால் 35 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னோ. 5-ஆவது பேட்டராக வந்த ஆயுஷ் பதோனி, பூரனுடன் பாா்ட்னா்ஷிப் அமைத்தாா். விக்கெட் சரிவை கட்டுப்படுத்திய இந்த இணை, 54 ரன்கள் சோ்த்தது. இதில், பூரன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு வீழ்ந்தாா். மறுபுறம் பதோனி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 6-ஆவது பேட்டராக வந்த டேவிட் மில்லா் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
பதோனி-சமத் ஜோடி...
பதோனியுடனான அவரின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 30 ரன்கள் கிடைத்தது. அடுத்து வந்த அப்துல் சமத் அதிரடி காட்ட, பதோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பதோனி - சமத் இணை 6-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி விக்கெட்டாக சமத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். ஓவா்கள் முடிவில் ஷா்துல் தாக்குா் 3, ஆவேஷ் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஷ்ரேயஸ் ஐயா்...
பஞ்சாப் பௌலா்களில், அா்ஷ்தீப் சிங் 3, லாக்கி ஃபொ்குசன், மேக்ஸ்வெல், மாா்கோ யான்சென், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். அடுத்து, 172 ரன்களை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில், பிரியன்ஷ் ஆா்யா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். அடுத்து வந்த நெஹல் வதேராவும் அதிரடி காட்ட, அவருடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா் ஷ்ரேயஸ் ஐயா். முடிவில் ஐயா் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52, வதேரா 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


