எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய அமைச்சர் பதவிக்காக நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 25-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்காக மத்திய பா.ஜ.க. அரசில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும், அது தொடர்பான சந்திப்பு தான் இது என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தம்பிதுரையிடம் கேட்டபோது. அவர் கூறியதாவது: தமிழகம்- கர்நாடக எல்லையில் ஜுஜுவாடி பகுதியில் வணிகவரித் துறையினர் வாகனங்களை சோதனையிடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அதுவும் அவை மண்டபத்தில்தான் சந்தித்தேன். மத்திய அமைச்சர் பதவிக்காக அவரை சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சி.வி. சண்முகம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மீண்டும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


