எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
சென்னை திருவல்லிக்கேனி லேடிவில்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெர்சுசா அறக்கட்டளையின் பங்களிப்பில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அறிவியல் ஆய்வகங்கள் கொண்ட கட்டிடம் 6,600 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வகத்தில் 24 இருக்கைகள் கொண்ட இரண்டு வகுப்பறைகளுடன் மொத்தம் 120 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளியின் வளாகத்தில் 4,600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மற்றொரு தனிக்கட்டிடத்தில் சமையல் அறை மற்றும் 60 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடம் ஆகியவை உள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறையில் தட்டச்சர் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


