எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆமதாபாத், ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமான விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை ஊடக ஒருங்கிணைப்பு மையத்தின் எக்ஸ் வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஜாம்நகர் விமானநிலையத்தில் இருந்து வான்வழியாக வந்த ஐ.ஏ.எப். இரண்டு இருக்கைகள் கொண்ட ஜாகுவார் விமானம் புதன்கிழமை இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு விமானத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெற்றிகரமாக நகர்த்தி பாதுகாப்பாக வெளியேற தொடங்கினர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர். நல்வாய்ப்பாக ஒரு விமானி காயங்களுடன் தப்பினார். அவர் ஜாம்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போன மற்றொரு விமானியை விமானப்படை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போன விமானி தீயில் சிக்கி உயிரிழந்ததாக வியாழக்கிழமை விமானப்படை அறிவித்துள்ளது. விமான படையின் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை இரவே சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு ஐ.ஏ.எப் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 7 ஆம் தேதி, ஹரியாணாவின் அம்பாலா அருகே ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது, அதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக என்று ஐ.ஏ.எப். அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


