Idhayam Matrimony

போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2025      தமிழகம்
Raghupathi 1

சென்னை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை, நீதி நிர்வாகம் , சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை மானியக் கோரி்க்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதிலளித்துப் பேசினார். 

பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

நீதி நிர்வாகத் துறை:  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக சார்பு நீதிமன்றம்,  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில்  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றங்கள்  அமைக்கப்படும்.

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் 3 கட்டங்களாக அமைக்கப்படும். திருச்சியில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

சிறைத்துறை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கட்டிடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் வசதிகளுடன் மாவட்ட சிறைச்சாலை வளாகம் கட்டப்படும். 

 

சட்டத் துறை:  அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் ரூ.1 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்கப்படும். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின் நூலகம் நிறுவப்படும். திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு ரூ.2.5 கோடியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடியும் நிதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து