Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் குடும்பம் - சமூகத்திற்கும் பாதிப்பு : சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு. ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட. விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு. இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசின் வாதங்களை அடுத்து விளையாட்டு நிறுவனங்கள் அவர்களது வாதங்களை முன்வைக்க வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து