எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 மாவோயிஸ்டுகள் நேற்று (ஏப்.5) பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரண்டைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் செயுதா நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்களை அறிந்து அவர்கள் தற்போது சரணடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பகுதி உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த 4 பேரை பிடிக்க ஒவ்வொருவரின் மீதும் தலா ரூ.4 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு துவங்கியதிலிருந்து 224 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கொள்கைகள் அனைத்து தற்போது செயல்படாது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் மாவோயிஸ்டுகள் நிறுவிய வெடிகுண்டு தாக்குதலினால் பலியானார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு பெண்ணுக்கு ஒரு கால் முழுவதுமாக சிதைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


