எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கை சென்றிருக்கும் பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கொழும்பில், நேற்று நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்மமயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு, இலங்கைக்கான இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட கடனுதவி ஆகியவை அதில் அடங்கும். இது தவிர மேலும் மூன்று ஒப்பந்தங்களும் கையொப்பமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் இலங்கை சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நேற்று காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்நாட்டு அதிபரின் செயலகத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான உயர்நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அதன் இறுதியாக, இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, 450 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியுவியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியது. இந்நிலையில், மோடியும் திசா நாயகவும் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை, இந்தியா வழங்கும் கடன் மறுசீரமைப்பு மற்றும் நாணயப் பரிமாற்றத்தில் இலங்கைக்கு இந்தியா உதவுவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


