எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
திலக் வர்மா வெளியேற்றம்...
நேற்று முன்தினம் இரவு மும்பை, லக்னோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 203/8 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. மும்பை அணியில் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை 18.5ஆவது பந்தில் போட்டியில் இருந்து காயமின்றி ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேற்றப்பட்டார்.
குழுவின் தோல்வி...
இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து பாண்டியா கூறியதாவது: திலக் வர்மாவை வெளியேற்றியது வெளிப்படையானது. எங்களுக்கு சில ஷாட்டுகள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுமாதிரி சில நாள்கள் வரும். எவ்வளவு முயற்சித்தாலும் பேட்டில் பந்து படாது. ஒட்டுமொத்தமாக இது பேட்டிங் குழுவின் தோல்வி.
பொறுப்பேற்கிறேன்...
நாங்கள் அணியாக வெல்கிறோம், அணியாக தோற்கிறோம். யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. பேட்டிங் குழுவின் தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தோற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் ஃபீல்டிங்கில் 10-15 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம் என்றார். பலரும் பாண்டியாவின் முடிவினை விமர்சித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


