எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதா மசோதா இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாக மாறியது. இதற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாஜகவின் இந்த மசோதா பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
இந்நிலையில் பீகார் எதிர்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் பீகாருக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் வக்பு மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இந்த மசோதாவை பீகாரில் செயல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் அடுத்து அரசாங்கத்தை அமைத்தால், மசோதா குப்பைத் தொட்டியில் போடப்படும் வக்பு மசோதாவுக்கு எதிராக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். இன்று முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள், நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


