எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அவர் 4 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆனால் வான்சின் பயண திட்டம் பெரும்பாலும் தனிப்பட்டதாக இருக்கும் என்றனர். ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு டெல்லியில் பிரதமர் மோடி விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சமீபத்தில் இந்தியா மீது கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


