எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், வேலை இழந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர், “உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும். நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள். பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் வழக்கில், பலர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீட் தேர்வில், பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்யவில்லை.
உச்ச நீதிமன்றம் எங்களுக்கு தெளிவுபடுத்தினால், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இல்லையென்றால், நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து உங்களுக்கு (நியமனம் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள்) ஆதரவாக நிற்போம். இரண்டு மாதங்கள் கஷ்டப்படுங்கள். 20 ஆண்டுகள் நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. அந்த இரண்டு மாதங்களுக்கும் நான் இழப்பீடு வழங்குவேன். நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை. கல்வி முறையை அழிக்க ஒரு சதி நடக்கிறது. தகுதியானவர்கள் வேலைகளை இழக்க நான் அனுமதிக்க மாட்டேன். அதோடு, உங்கள் சேவை இடைவெளி இன்றி தொடர்வதை உறுதி செய்ய எங்களிடம் தனித்தனி திட்டங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


