Idhayam Matrimony

வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
Kashmir-assembly

ஜம்மு, வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் முதன்முறையாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வக்பு திருத்த மசோதா கடந்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதா சட்டமாகி இருக்கிறது. இந்நிலையில், வக்பு சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்கள் என ஒன்பது உறுப்பினர்கள் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதரிடம் நோட்டீஸ் அளித்தனர்.

எனினும், உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். உறுப்பினர்களின் நோட்டீஸூக்கு பதில் அளித்த சபாநாயகர் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர்,  இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.  எனவே, ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் விவாதிக்க முடியாது என்று  தெரிவித்தார்.

சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், தாள்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை 15 நிமிடம் ஒத்திவைப்பதாக சபாநாயர் அப்துல் ரஹீம் ராதர் அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து