எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சீனா : அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது உலக நாடுகள் பதில் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதனால், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகிவரும் சூழலில், அதிபா் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:-
சீனா 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், பிரிட்டன் 10 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், தைவான் 32 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், மலேசியா 24 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், சுவிட்ஸர்லாந்து 31 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், கம்போடியா 49 சதவீதம், இலங்கை 44 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், இந்த நிலையில், சீன அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நேற்று (ஏப். 7) செய்தியாளர்களுடன் பேசுகையில்: “தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிற நாடுகள் மீது வரி திணிப்பு மற்றும் பொருளாதார சர்வாதிகாரத்தனமான மனப்பான்மையுடன் பிற நாடுகளை மிரட்டும் தன்னிச்சையான நடவடிக்கை இது” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
சீனா தமது உரிமைகளையும் விருப்பங்களையும் உறுதித்தன்மையுடன் பாதுகாக்குமென்றும், சீனாவுடன் உறவை கடைப்பிடிக்க அழுத்தமும் மிரட்டல் விடுக்கும் பாணியையும் கையிலெடுத்தல் அது வேலைக்காகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்காவின் அனைத்து பொருள்கள் மீதும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


