Idhayam Matrimony

கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில், கலால் வரியை பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது. அதாவது, கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிட்டத்தட்ட கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகளும் இந்தியாவில் குறையும் என அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத வகையில் மத்திய அரசு கலால் வரியை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வணிக அழுத்தம், சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், எண்ணெய் விலைகள் நேற்று சரிவைக் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிலையில், கச்சா எண்ணெய் கொண்டு பெட்ரோல் உற்பத்தி செய்யும்போது மீது மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியிருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று தெரிந்துவிட்டது. ஆனால் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து