Idhayam Matrimony

புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த ஜே.பி.நட்டா, கடந்த 2019-ம் ஆண்டு, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் உள்பட கட்சி ரீதியிலான நிர்வாக காரணங்களால், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. முன்னதாக பா.ஜ.க.வின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும், பா.ஜ.க. அமைப்பு ரீதியிலான தேர்தலும் நடைபெற்று வருகிறது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்திடும் நோக்கத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. பூத் கமிட்டி தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள் தேர்தலுக்கு பிறகு தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும். தற்போது, நாடு முழுவதும் பூத் கமிட்டி, மண்டல், மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்று புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கு முன்னதாக, 19 மாநிலங்களில் புதிய மாநில தலைவர்களை நியமனம் செய்வதற்கான பணிகளை தேசிய தலைமை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, அமைப்பு ரீதியாக பெரிய மாநிலங்களில் மாநில தலைவரை விரைவில் நியமிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதில், உத்தரபிரதேசத்தின் பா.ஜனதா மாநில தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் மற்றும் மத்திய பிரதேச மாநில தலைவர் வி.டி.சர்மா ஆகியோருக்கு பதிலாக புதிய முகங்களை தேர்வு செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. 

அதேநேரம், கடந்த 2023-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பி.ஒய்.விஜேந்திரா அந்த பதவியில் தொடர்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், குஜராத், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் புதிய தலைவர்களை தேர்வு செய்ய தமிழக தலைவர் யார்? முடிவு செய்துள்ளது. தமிழக தமிழக தலைவர் யார்? தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் சமீப நாட்களாக பரவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து