Idhayam Matrimony

ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      உலகம்
Visa-Canada-2023-10-26

Source: provided

ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசாக்களுக்கு சவுதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்து உள்ளது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளை சேர்ந்த ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இந்த தடை விதிக்கப்படுகிறது. 

சவுதி அரேபியாவில் 2024-ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையின்போது, 1,200 பக்தர்கள் பலியானார்கள். அதிக மக்கள் நெருக்கடியால், வெப்பம் அதிகரிக்க வழியேற்பட்டது இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்த தடையானது, மக்காவுக்கான ஹஜ் புனித யாத்திரை நிறைவு பெறும் ஜூன் மாதத்தின் பாதி வரை நடைமுறையில் இருக்கும். வெளிநாட்டினர் பலரும் உம்ரா விசாக்கள் அல்லது வருகைக்கான விசாக்களுடன் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவுக்குள் நுழைந்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரமின்றி கூடுதலான நாட்கள் தங்கி, சட்டவிரோத வகையில் ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள். 

இதுபோன்று முறையான பதிவு செய்யாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் தனி நபர்களை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத வேலைவாய்ப்பில் ஈடுபடும் செயலை தவிர்ப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களை ஒதுக்கீட்டு முறையில் சவுதி அரேபியா அனுமதிக்கும் வழக்கம் கொண்டுள்ளது. விதிகளை மீற கூடிய நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் வருங்காலத்தில் 5 ஆண்டுகள் தடையை எதிர்கொள்வார்கள் என்றும் சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், விசாக்களை வைத்திருக்கும் தனிநபர்கள் வருகிற 13-ந்தேதி வரை சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து