எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கூடலூர் : நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமாக வறுத்தெடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 4வது நாளாக பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை தொடங்கி நள்ளிரவு வரை மழை நீடித்ததால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. மேலும் விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.69 அடியாக உள்ளது. வரத்து 504 கன அடியாக உள்ள நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3000 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.70 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீரே வராத நிலையில் தற்போது அணைக்கு 493 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1509 மி.கன அடியாக உள்ளது.
கும்பக்கரை அருவியில் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக அங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


