எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் தனியார் கல்லூரி விழாவில் சீமான், அண்ணாமலை இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். மேலும் விழாவில் பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் பேசியதும் அதேபோல சீமானைப் புகழ்ந்து அண்ணாமலை பேசியுள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய சீமான், "உலகம் முழுக்கச் செல்லும் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும், உலகின் முதல் மொழியான தமிழ் மொழி, எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை எனக் கூறுகிறார். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறார். அதேபோல தமிழகத்தில் பா.ஜ.க. என்ற ஒரு கட்சி இருக்கிறது, அந்தக் கட்சி வளர்கிறது என்று தன்னுடைய செயல்களால் நிகழ்த்திக் காட்டியவர் என் அன்பு இளவல் அண்ணாமலை" என்று பேசியுள்ளார்.
அதேபோல, சீமானை போர்க்களத்தில் நிற்கக்கூடிய ஒரு தளபதியாகத்தான் பார்க்கிறேன். கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டோடு தைரியமாக போர்க்களத்தில் போராடக் கூடியவர். அதுவே அவரை அரசியலில் ஒரு தனிப்பெரும் தலைவராக உயர்த்தியிருக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சீமான், அண்ணாமலை இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


