Idhayam Matrimony

அன்னை இல்ல விவகாரம்: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகா்  சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தைத் தயாரித்தனா். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3,74,75,000 கடன் வாங்கியிருந்தனா். வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததாலும், மத்தியஸ்தரின் உத்தரவுபடி படத்தின் உரிமைகளை வழங்காததாலும்,  சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட நீதிபதி  உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராம்குமாா் தரப்பில், சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. தனது சகோதரா் நடிகா் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எவ்வாறு ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். மேலும், செய்திகளின் மூலம்தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு எனத் தெரிந்துகொண்டதாக தெரிவித்த நீதிபதி, பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார். மேலும், இந்த வழக்கில், நடிகர் பிரபு அண்ணனுக்கு உதவலாமே என்று கோரியிருந்த நிலையில், பிரபு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ராம்குமார் பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறார். அவருக்கு உதவ முடியாது என்று தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் தான் நேற்று ராம்குமார் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது வாதத்தை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து