எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும் என்றும் பூக்கடை அருகே 30 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பபுச அறிவித்துள்ளார்/ சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் ; சென்னை பாரதி பெண்கள் கல்லூரி கூடுதல் வசதிகளோடு ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும். ரூ161 கோடி மதிப்பீட்டில் இருபது அரங்கு களுடன் தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும். சென்னையில் ஒன்பது அரசுப் பள்ளிகள், 6 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் ரூ.40 கோடியில் அமைக்கப்படும். பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ.30 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ.37 கோடியில் மேம்படுத்தப்படும். வட சென்னையில் நான்கு இடங்களில் ஏசி பேருந்து நிறுத்தங்கள் ரூ.8 கோடியில் அமைக்கப்படும். சென்னையில் 7 பன்நோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும். சென்னையில் 6 அமுதம் அங்காடிகள் ரூ.22 கோடியில் அமைக்கப்படும். சென்னை வண்டலூர் கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப் பொருட்கள் கிடங்கு அமைக்கப்படும். ராயபுரம் சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் ரூ.6 கோடியில் அமைக்கப்படும். ராயபுரம் பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை குரோம்பேட்டையில் ரூ.10 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


