Idhayam Matrimony

கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Senthil-Balaji-2024-11-21

கோவை, மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று (ஏப்.10) தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கோவை  மாவட்டத்தில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

இந்நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார். கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர குடிநீர் விநியோகிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மின்தடை ஏற்படாது,” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து