எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டை பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த வாரம் பூப்பெய்தியுள்ளா். பள்ளியில் தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை எழுத மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பூப்பெய்திய மாணவியை தீட்டாக கருதி பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்து பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய், தனியாக அமர்ந்து தேர்வு எழுதிய மகளை கண்டு மனம் பதறியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, "இங்கு இப்படித்தான் நடக்கும். விருப்பம் இல்லையென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளி முதல்வரை சஸ்பெண்டு செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


