Idhayam Matrimony

சினிமா வேறு - அரசியல் வேறு: விஜய் குறித்து அமைச்சர் காந்தி

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Vijay 2023-12-30

Source: provided

சென்னை: நீட் விலக்குச் சட்ட மசோதா தொடர்பான விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார்.

நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல். பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்  என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்  விஜய் விமர்சனம் தொடர்பான அமைச்சர் காந்தி கூறியதாவது: யார் அவர்? என்ன தராதரம் இருக்கிறது? பொதுமக்களுக்கு என்ன செய்துள்ளார்?  விஜய் ஒரு சிறப்பான நடிகர், அதில் எந்த குறையும் சொல்லமாட்டோம். சினிமா வேறு, அரசியல் வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து