எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
கடந்த 2017-ல், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எடக்கரை வனப் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அவர்களை, தமிழகம் மற்றும் கேரள மாநில மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், அவர்கள் தப்பி விட்டனர். தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த பண்ணைபுரம் கார்த்திக்கையும், ஓசூரில் சந்தோஷ்குமாரையும், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, கேரளாவில் வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதியிலும், கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியிலும், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் வந்துள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2014 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த 3 மாநில படைகள் ரோந்துப் பணியின் போது, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது நடக்கும் ரோந்து கண்காணிப்பில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டறியப்படவில்லை. எனினும், கண்காணிப்பு தொடர்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


