எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும் என்றும், அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆறுமுக நயினார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவில் மற்றும் பாபநாசம் சுவாமி கோவில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என செயல் அலுவலர் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார் என்றும், அனைத்து கோவில்களிலும் அதை பின்பற்ற பொதுவான உத்தரவை கோர்ட் பிறப்பிக்காத நிலையில், அதை தவறாகப் புரிந்துகொண்டு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷா பானு, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு 4 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


