Idhayam Matrimony

காயம் காரணமாக ருதுராஜ் விலகல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் டோனி

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

சென்னை: காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதால் சி.எஸ்.கே. அணி கேப்டனாக மீண்டும் டோனி பொறுப்பேற்கிறார்.

ருதுராஜ் விலகல்...

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி நடப்பு சீசனில் 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

மீண்டும் கேப்டன்...

இந்நிலையில் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த மகேந்திரசிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அறிவித்துள்ளார். இன்று நடைபெற உள்ள கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலிருந்து டோனி கேப்டனாக செயல்பட உள்ளார்.

சாதாரண வீரராக...

இது சென்னை அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும். ஏனெனில் கடந்த காலங்களில் சென்னை அணி டோனி தலைமையிலேயே 5 கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும் இவரது தலைமையில் வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ளது. கடந்த சீசனில் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த டோனி சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து