Idhayam Matrimony

பீகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      இந்தியா
Suicide 2023 04 29

பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில்  மட்டும் 22 பேர் பலியுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாட்னா, போஜ்பூர், ஷிவான் மற்றும் கயாவில் தலா நான்கு பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் தலா மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இடியுடன் கூடிய மழைக்கு 21 பேரும், மின்னல் தாக்கியதில் ஒருவரும் பலியானதாக நாளந்தா மாவட்ட ஆட்சியர் சஷாங்க் பூபங்கர் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். உடற்கூராய்வுக்குப் பிறகு உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்மா கிராமத்தில் வியாழக்கிழமை ஒரு கோயில் மீது மரம் விழுந்ததில் 6 பேர் பலியாகினர். மழையின் போது பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பலியாகினர். இதனிடையே மழைக்கு பலியானோரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து