Idhayam Matrimony

தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
Tamilisai-2025-04-11

சென்னை, குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் இரவு சென்னை வந்துள்ளார்.

 இந்த நிலையில் நேற்று காலை கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய மந்திரி அமித்ஷா ஆறுதல் கூறினார். அமித்ஷாவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரும் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து