எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் தீ பரவியதுமே, கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ சற்று நேரத்தில் ஆறு மாடிக் கட்டிடத்துக்கும் பரவியதாகவும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, கட்டத்துக்குள் நான்கு பேர் சிக்கியிருத்தாகவும், அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்ததாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகக் கட்டிடம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரதீப் ஜெய்ஸ்வாலுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


