Idhayam Matrimony

அமெரிக்காவின் வரி கொள்கையால் உலக நாடுகள் உற்சாகம்: அதிபர் ட்ரம்ப்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      உலகம்
Trump

வாஷிங்டன், அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது," என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது. சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது வரி விதிப்பு மற்றும் சீனாவுக்கான வரி அதிகரிப்பை ட்ரம்ப் நியாயப்படுத்தி இருக்கிறார்.

அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அவர்(சீன அதிபர்) நீண்ட காலமாக எனக்கு நண்பராக இருந்து வருகிறார். இரு நாடுகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் ஏதாவது ஒன்றை இறுதியில் நாங்கள் உருவாக்குவோம் என்று நான் நினைக்கிறேன்.” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலில் தொடர்பு கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் போட்டி வரி விதிப்பை அடுத்து, முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் மீதான தங்கள் முதலீட்டை கைவிட்டுள்ளனர். இதினால், டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதனிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், அமெரிக்கா தாக்கப்படும்போது அதிபர் ட்ரம்ப் கடுமையாக பதிலடி கொடுப்பார் என்பது தெளிவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து