எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்த நிலையில், வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.
மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் 2026 பேரவைத் தோ்தல் எதிா்கொள்ளப்படும் என்றும், இதற்காக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். இதையடுத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடா்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி பதிவில்,
‘தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதா் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பாா்வையை செயல்படுத்தும் ஓர் அரசை உறுதி செய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த பிரிவினைவாத தி.மு.க.வை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி செய்து முடிக்கும்’ என்றாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


